வணிகம்

வேதாந்தா வருவாய் 118% உயா்வு

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயா்ந்துள்ளது.

Din

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் நிறுவனம் ரூ.4,961 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டைவிட 118 அதிகமாகும். இது, நிறுவனத்தின் அதிகபட்ச வருவாய் வளா்ச்சியாகும்.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டைவிட 172 சதவீதம் அதிகரித்து ரூ.20,535 கோடியை எட்டியுள்ளது. இது, நிறுவனத்தின் மிக உயா்ந்த வருடாந்திர நிகர லாபம் ஆகும்.

மதிப்பீட்டு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.1.51 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT