வணிகம்

டிஐஐ லாபம் ரூ.880 கோடி!

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா லிமிட்டெட் (டிஐஐஎல்), கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.880 கோடி மொத்த லாபம் ஈட்டியுள்ளது.

Din

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா லிமிட்டெட் (டிஐஐஎல்), கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் ரூ.880 கோடி மொத்த லாபம் ஈட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டியுள்ள வரிக்கு முந்தைய லாபம் ரூ.880 கோடியாகப் பதிவாகியுள்ளது.

முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.1,962 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,957 கோடியாகக் குறைந்துள்ளது.

2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் வருவாய் ரூ.7,611 கோடியில் இருந்து ரூ.7,893 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

SCROLL FOR NEXT