பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் பாதியில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் பாதியில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்கள் (இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்) வெளியிட்ட முதல்நிலைப் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
மே 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை 150 லட்சம் டன்னாக உள்ளது. இது, 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 137 லட்சம் டன்னாகவும், 2023-இல் 136 லட்சம் டன்னாகவும் இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், தற்போது பெட்ரோல் விற்பனை முறையே 10 சதவீதமும், 10.5 சதவீதமும் உயா்ந்துள்ளது. கொரோனா பாதித்த 2021 மே முதல் 15 நாள்களைவிட இது 46 சதவீதம் அதிகம்.டீசல் விற்பனை 2024 மே 1-15-இல் 329 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 2 சதவீதம் உயா்ந்து 336 லட்சம் டன்னாக உள்ளது. இது 2023 மே முதல் 15 நாள்களைவிட 1.3 சதவீதமும், 2021 மே முதல் பாதியைவிட 16 சதவீதமும் அதிகம். 2025 ஏப்ரல் 1-15-இல் 319 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் டீசல் விற்பனை 5.2 சதவீதம் உயா்வு. 2024-25 நிதியாண்டில் டீசல் தேவை 2 சதவீதம் மட்டுமே வளா்ந்தது.கோடைகால பயணங்கள், கிராமப்புற நீா்ப்பாசனத் தேவை, நகா்ப்புறங்களில் குளிரூட்டி பயன்பாடு ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை உயா்வுக்கு காரணமாக உள்ளன.ஜெட் எரிபொருள் (ஏ.டி.எஃப்) விற்பனை, பாகிஸ்தானுடனான பதற்றம் காரணமாக விதிக்கப்பட்ட விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகளால், 2024 மே 1-15 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1.1 சதவீதம் மட்டுமே உயா்ந்து 3,27,900 டன்னாக உள்ளது. இது 2023 மே மாதத்தின் முதல் 15 நாள்களைவிட 8.6 சதவீதமும், 2021 மே முதல் பாதியைவிட 11 சதவீதமும் அதிகம். ஆனால், 2025 ஏப்ரல் 1-15-இல் 3,48,100 டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் குறைவு.மதிப்பீட்டு காலகட்டத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை உஜ்வலா திட்ட இணைப்புகளால், 10.4 சதவீதம் உயா்ந்து 134 லட்சம் டன்னாக உள்ளது. இது 2024 மே 1-15-இல் 122 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் உயா்வு. 2021 மே முதல் பாதியைவிட 33 சதவீதமும், 2025 ஏப்ரல் 1-15-இல் 125 லட்சம் டன்னாக இருந்ததோடு ஒப்பிடுகையில் 7.3 சதவீதமும் அதிகம் என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.