கோப்புப் படம் 
வணிகம்

சரிவுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி துறை பங்குகள் வீழ்ச்சி!

சென்செக்ஸ் 271 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

DIN

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (மே 19) பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 270 புள்ளிகளும் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.

துறை வாரியாகப் பார்க்கும்போது ஐடி துறை பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் பொருள்கள் துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.

ரியாலிட்டி, பொதுத் துறை மற்றும் பார்மா துறை பங்குகள் 0.5% முதல் 2% வரை உயர்வடைந்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் சரிந்து 82,059.42 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.33 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 24,945.45 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.30 சதவீதம் சரிவாகும்.

18 நிறுவனப் பங்குகள் உயர்வு

வணிகத்தின் தொடக்கத்தில் 82,354 புள்ளிகளாகத் தொடங்கிய சென்செக்ஸ், 82,424 வரை சென்றது. இது இன்றைய நாளின் அதிகபட்ச உயர்வாகும். நாளின் பிற்பாதியில் சற்று சரிந்து 81,964 என்ற இன்றைய நாளின் அதிகபட்ச சரிவை எட்டியது.

வணிக நேர முடிவில், 271 புள்ளிகள் வரை சரிந்து 82,059 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 12 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக ஈடர்னல் நிறுவனப் பங்குகள் -3.15% சதவீதம் சரிந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் -3.15%, டிசிஎஸ் -1.20%, டெக் மஹிந்திரா -1.19%, ரிலையன்ஸ் -1.08%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.95%, அதானி போர்ட்ஸ் -0.65% சரிந்தன.

எனினும், பவர் கிரிட் (1.29%), பஜாஜ் ஃபின்சர்வ் (0.97%), என்டிபிசி (0.60%), இந்தஸ்இந்த் வங்கி (0.50%), எஸ்பிஐ (0.37%), பார்தி ஏர்டெல் (0.24%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்திருந்தன.

நிஃப்டி நிலவரம்

நிப்ஃடியை பொருத்தவரை 25,005 புள்ளிகளுடன் தொடங்கியது. அதிகபட்சமாக 25,062 புள்ளிகள் வரை உயர்ந்தது. பிற்பாதியில் தொடர்ந்து சரிந்து அதிகபட்சமாக 24,916.65 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 74 புள்ளிகள் சரிந்து 24,945.45 புள்ளிகள் வரை சரிந்தது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பவர் கிரிட், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, இந்தஸ்இந்த் வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், எஸ்பிஐ போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

எனினும், ஈடர்னல், கிரேசிம், இன்ஃபோசிஸ், டாடா கன்சியூமர், டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

இதையும் படிக்க | கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி! என்ன தெரியுமா?

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT