கோப்புப்படம் 
வணிகம்

சென்செக்ஸ் 760 புள்ளிகளுக்கு மேல் உயர்வு; எஃப்எம்சிஜி, பவர் பங்குகள் ஏற்றம்!

இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

DIN

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன.

டாப் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கொள்முதல் செய்ததால் உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை.

வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 953.18 புள்ளிகள் உயர்ந்து 81,905.17 ஆக இருந்தது. வர்த்தகத்தின் சீரான தொடக்கத்திற்குப் பிறகு, 30 பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச் சந்தை முடிவில் 769.09 புள்ளிகள் உயர்ந்து 81,721.08 புள்ளிகளாகவும் நிஃப்டி 243.45 புள்ளிகள் உயர்ந்து 24,853.15 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் எடர்னல், பவர் கிரிட், ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் சன் பார்மா கிட்டத்தட்ட 2 சதவிகிதம் சரிந்தது.

மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் கிட்டத்தட்ட 19 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதாக அறிவித்ததையடுத்து சன் பார்மா பங்கு சரிந்து முடிந்தன.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தும், அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் மத்திய வர்த்தகத்தில் உயர்ந்து காணப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) இரவு வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் ஏற்ற-இறக்கத்தில் முடிவடைந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.23 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 64.29 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.5,045.36 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

இதையும் படிக்க:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT