கோப்புப்படம் ANI
வணிகம்

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று(மே 26) பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,928.95 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.20 மணியளவில், சென்செக்ஸ் 509.02 புள்ளிகள் அதிகரித்து 82,230.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை உயர்ந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144.40 புள்ளிகள் உயர்ந்து 24,997.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறைகளைப் பொருத்தவரை நிஃப்டி மெட்டல் 0.9 சதவீதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பார்மா, வங்கி, ஆட்டோமொபைல் துறைகள் தலா 0.7 சதவீதம் உயர்ந்தன. நிஃப்டி ஐடி, எஃப்எம்சிஜி தலா 0.6 சதவீதம் உயர்ந்தன.

சென்செக்ஸ் பங்குகளில், எம் அண்ட் எம், பவர் கிரிட், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபத்தைப் பெற்றன. அதேநேரத்தில் எடர்னல் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT