முகப்பு
வணிகம்

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...

Updated On : 29 மே, 2025 at 4:10 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை திடீா் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ. 71,600-க்கும் செவ்வாய்க்கிழமை ரூ. 71,960-க்கும் விற்பனையானது.

நேற்று சவரனுக்கு அதிரடியாக ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ. 8,895-க்கும் ஒரு சவரன் ரூ. 71,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை தொடர்ந்து 6-வது நாளாக எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 111-க்கும் ஒரு கிலோ ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →