வணிகம்

டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.

DIN

புதுதில்லி: டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட் மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.

கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனமானது ரூ.1,989.69 கோடி நிகர இழப்பை பதிவு செய்தது. அதே வேளையில், மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15.55 சதவிகிதம் குறைந்து ரூ.343.66 கோடியாக இருந்த நிலையில் அதன் மொத்த செலவுகள் 2.16 சதவிகிதம் குறைந்து ரூ.417.16 கோடியாக இருந்தது. இதற்கிடையில் நிறுவனத்தின் சந்தா வருவாய் ரூ.295.9 கோடியாக இருந்தது. இது சுமார் 16.82 சதவிகிதம் சரிவு என்றது.

நிறுவனத்தின் விளம்பர வருவாய் 40 சதவிகிதம் குறைந்து ரூ.4.1 கோடியாக இருந்தது. இருப்பினும் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பர கட்டணங்கள் மூலம் டிஷ் டிவியின் வருவாய் 2.6 சதவிகிதம் அதிகரித்து ரூ.35.8 கோடியாக உயர்ந்தது.

மார்ச் காலாண்டில் டிஷ் டிவியின் மொத்த வருமானம் ரூ.350.35 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு - ஆண்டு 15 சதவிகிதம் குறைந்துள்ளது. மார்ச் 31, 2025ல் முடிவடைந்த நிதியாண்டில், டிஷ் டிவியின் நிகர இழப்பு ரூ.487.66 கோடி.

நிதியாண்டு 2025ல் அதன் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 15 சதவிகிதம் குறைந்து ரூ.1,593.95 கோடியாக இருந்தது.

டிஷ் டிவியின் பங்குகள் புதன்கிழமை அன்று ரூ.5.90 ஆக முடிவடைந்தன. இது அதன் முந்தைய முடிவை விட 4.98 சதவிகிதம் அதிகமாகும்.

இதையும் படிக்க: செயில் நிகர லாபம் 11% அதிகரிப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT