கோப்புப் படம் 
வணிகம்

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் விற்பனை 15.3% அதிகரிப்பு!

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தனது உள்நாட்டு விற்பனை அக்டோபர் மாதம் 6,394 கார்களாக 15.3% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தனது உள்நாட்டு விற்பனை அக்டோபர் மாதம் 6,394 கார்களாக அதாவது 15.3% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 5,546 கார்களாக இருந்தது.

நிறுவனம் 4,124 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் இந்த மாதத்திற்கான மொத்த விற்பனையானது 10,518 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் தெரிவித்துள்ளது.

பண்டிகை விற்பனை மற்றும் ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பு உள்ளிட்டவையால், அக்டோபர் மாதத்தில் சிட்டி, அமேஸ் மற்றும் எலிவேட் வரிசையில் வலுவான தேவையை ஏற்பட இது தூண்டியதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணைத் தலைவர் குணால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அசோக் லேலேண்ட் விற்பனை 16% அதிகரிப்பு!

Honda Cars India Ltd reported a 15.3 per cent increase in domestic sales at 6,394 units in October as compared to 5,546 units in the same month last year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT