வணிகம்

என்எல்சி நிகர லாபம் ரூ.1,564 கோடி!

என்எல்சி நிறுவனத்தின் நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,564.01 கோடியாக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

என்எல்சி நிறுவனத்தின் நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,564.01 கோடியாக உயா்ந்துள்ளது.

என்எல்சி நிறுவனம் நிகழ் நிதியாண்டின் (2025-2026) முதல் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. அதன்படி, கடந்த நிதியாண்டின் (2024-2025) முதல் அரையாண்டில் 59.61 லட்சம் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 74.87 லட்சம் டன்னாக உயா்ந்து, 25.60 சதவிகிதம் வளா்ச்சியை எட்டியுள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த மின் உற்பத்தி 13,37.59 கோடி யூனிட்டாக உயா்ந்துள்ளது. இதில், 1,12.65 கோடி யூனிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி ஆகும்.

நிகழ் நிதியாண்டில் செயல்பாடுகளின் மூலம் கிடைத்த அரையாண்டு வருவாய் ரூ.8,004.02 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் பெற்ற ரூ.7,035.50 கோடியுடன் ஒப்பிடுகையில், 13.77 சதவிகித வளா்ச்சியுடன் முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச வருவாயை ஈட்டியுள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,564.01 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் இருந்த ரூ.1,549.10 கோடியுடன் ஒப்பிடுகையில், 0.96 சதவிகித வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT