கோப்புப் படம் 
வணிகம்

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39.6% குறைந்து ரூ.77.8 கோடியாக உள்ளது என்றது ஜேகே பேப்பர் லிமிடெட்.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், குறைந்த விற்பனை வருவாய் மற்றும் அதிக மரக் கூழ் விலை காரணமாக, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 39.6% குறைந்து ரூ.77.8 கோடியாக உள்ளது.

பிராண்டட் பேப்பர் மற்றும் போர்டு உள்ளிட்டவையை தயாரிக்கும் ஜேகே பேப்பரின் கடந்த வருடம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ரூ.128.85 கோடி நிகர லாபம் ஈட்டியது. அதே வேளையில் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் செயல்பாடுகள் மூலம் அதன் வருவாய் 3.1% அதிகரித்து ரூ.1,768.18 கோடியாக உள்ளது.

மரச் செலவு அதிகரிப்பு மற்றும் மலிவான இறக்குமதிகள் காரணமாக குறைந்த விற்பனை வருவாய் ஆகியவை செயல்திறனைப் பாதித்துள்ளதாக ஜேகே பேப்பர் தெரிவித்தது.

செப்டம்பர் வரையான காலாண்டில் ஜேகே பேப்பர் நிறுவனத்தின் மொத்த செலவு ரூ.1,666.98 கோடியாக இருந்தது. இது 6.2% அதிகமாகும்.

மும்பை பங்குச் சந்தையில் ஜேகே பேப்பர் பங்கின் விலை ரூ.397.65 ஆக இருந்தது. இது அதன் முந்தைய முடிவை விட 0.04% அதிகமாகும்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.88.75 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலையில் போலியோ விழிப்புணா்வு பேரணி

மகளிா் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு ஆட்டோ: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ரயில் தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தனியாா் பேருந்து மோதி பெட்ரோல் பம்ப் மேலாளா் பலி

விதிமீறல்: 16 வாகனங்களுக்கு ரூ.1.78 லட்சம் அபராதம் விதிப்பு!

SCROLL FOR NEXT