மும்பை: கலவையான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் தொடக்கத்தில் ஓரளவு உயர்ந்து வர்த்தகமானது. தொலைத்தொடர்பு மற்றும் நுகர்வோர் சாதனங்களைத் தவிர மற்ற துறைகளில் விற்பனை அதிகரித்ததால் நிஃப்டி 25,600க்குக் கீழே சென்றது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 565.72 புள்ளிகள் சரிந்து 83,412.77 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 519.34 புள்ளிகள் சரிந்து 83,459.15 புள்ளிகளாகவும், நிஃப்டி 165.70 புள்ளிகள் சரிந்து 25,597.65 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.7% சரிந்து நிறைவடைந்தன.
சென்செக்ஸில் பவர் கிரிட், எடர்னல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மாருதி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் டைட்டன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்ந்தன.
நிஃப்டி-யில் பவர் கிரிட் கார்ப், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எடர்னல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் டைட்டன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்தன.
தொலைத்தொடர்பு துறை தவிர ஐடி, ஆட்டோ, எஃப்எம்சிஜி, உலோகம், மின்சாரம், ரியல் எஸ்டேட், பொதுத்துறை குறியீடுகள் தலா 0.5 முதல் 1% வரை சரிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், சிறந்த காலாண்டு வருவாய் காரணமாக பாரதி ஏர்டெல் பங்குகள் 52 வார உச்சத்தை இன்று எட்டியது. வலுவான 2-வது காலாண்டு வருவாய் காரணமாக டைட்டன் பங்குகள் 2% உயர்ந்தன.
பலவீனமான காலாண்டு முடிவுகளால் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் பங்குகள் 3% சரிந்தன. அக்டோபர் 2025க்கான பலவீனமான விற்பனையை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 4%க்கும் மேல் சரிந்தன. 2-வது காலாண்டு நிகர இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரித்ததால் ஒன் மொபிக்விக் பங்குகள் 5% சரிந்தன.
எஸ்.ஜே.எஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 2-வது காலாண்டு லாபம் 48% உயர்ந்ததையடுத்து அதன் பங்கின் விலை 6% உயர்ந்தன. வலுவான இரண்டாம் காலாண்டு வருவாய் காரணமாக 3எம் இந்தியா பங்கின் விலை 16% உயர்ந்தன. இரண்டாம் காலாண்டில் லாபம் 7% உயர்ந்ததால் சிட்டி யூனியன் வங்கி பங்கின் விலை 4% உயர்ந்தன.
ஜே.கே. பேப்பர் 2-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த லாபம் 41% குறைந்ததால் அதன் பங்குகள் 3% சரிந்தன. இஸ்ரேலை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்துடன் 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தொழில்நுட்ப உரிமை பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் ப்ளூ கிளவுட் பங்குகள் 10% உயர்ந்தன. 5% இழப்பை 2-வது காலாண்டில் ஸ்னோமேன் லாஜிஸ்டிக்ஸ் பதிவு செய்ததால் அதன் பங்குகள் 5% சரிந்தன.
சிட்டி யூனியன் வங்கி, எம்ஆர்பிஎல், அசாஹி இந்தியா, டெல்லிவரி, டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஹெச்பிசிஎல், இக்ளெர்க்ஸ் சர்வீசஸ், எல்&டி ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பேங்க் ஆஃப் இந்தியா, எம்சிஎக்ஸ் இந்தியா, உள்ளிட்ட 140 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை தொட்டது.
ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.34 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 64.02 அமெரிக்க டாலராக உள்ளது.
குரு நானக் ஜெயந்தி முன்னிட்டு நாளை (நவம்பர் 5) பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வர்த்தகம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வழக்கம் போல தொடங்கும்.
இதையும் படிக்க: சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் 15 சதவீதம் உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.