பங்குச்சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
84,000.6 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 281.22 புள்ளிகள் குறைந்து 83,697.27 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் தற்போது 99.35 புள்ளிகள் குறைந்து 25,664.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் பாரதி ஏர்டெல், டைட்டன், ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
அதேநேரத்தில் பவர்கிரீட், எட்டர்னல், மாருதி சுசுகி, பெல், ஹெச்சிஎல் உள்ளிட்டவற்றின் பங்குகள் விலை குறைந்தன.
நிஃப்டி 50 பங்குகளில் க்ளாண்ட் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப், இன்டலெக்ட் டிசைன் அரினா, பவர் கிரிட், வெல்ஸ்பன் கார்ப் ஆகியவை அதிக இழப்பைச் சந்தித்துள்ளன.
துறைகளில், தொலைத்தொடர்பு குறியீடு 1.3% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஐடி, ஆட்டோ, எஃப்எம்சிஜி, மின்சாரம், பொதுத்துறை நிறுவன குறியீடுகள் தலா 0.5% சரிந்துள்ளன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.2% உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு நிலையாக வர்த்தகமாகிறது.
நேற்று பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கினாலும் வர்த்தக நேர இறுதியில் சற்றே ஏற்றத்துடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.