பங்குச் சந்தை  ANI
வணிகம்

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

இந்திய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (நவ. 4) வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 519.34 புள்ளிகள் சரிந்து 83,459.15 புள்ளிகளாகவும், நிஃப்டி 165.70 புள்ளிகள் சரிந்து 25,597.65 ஆகவும் நிறைவுபெற்றது.

சென்செக்ஸில் பவர் கிரிட், எடர்னல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், மாருதி மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் டைட்டன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் பவர் கிரிட் கார்ப், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, எடர்னல் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் டைட்டன், பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்தன.

இந்த நிலையில், குரு நானக் ஜெயந்தி முன்னிட்டு இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வர்த்தகம் நாளை (வியாழக்கிழமை) காலை வழக்கம் போல தொடங்கும்.

Indian stock market closed today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மியான்மர் பொதுத்தேர்தல் முடிவுகள்: ராணுவ ஆதரவு யுஎஸ்டிபி ஆட்சியமைக்கிறது!

கருப்பு பல்சர் டிரைலர்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

அதிமுக ஆட்சியில் ஸ்கூட்டி கொடுக்கப்படவில்லையா? கனிமொழிக்கு பதிலடி

பிலிப்பின்ஸில் 350 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!

SCROLL FOR NEXT