வணிகம்

ஒன் மொபிக்விக் இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரிப்பு!

ஒன் மொபிக்விக் சிஸ்டம்ஸ் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஃபின்டெக் நிறுவனமான ஒன் மொபிக்விக் சிஸ்டம்ஸ் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த இழப்பு ரூ.28.6 கோடியாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ரூ.3.59 கோடி இழப்பை சந்தித்திருந்தது.

காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், மொபிக்விக் வருவாய் 0.4% குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதன் வருவாய் இழப்பு ரூ.41.9 கோடியிலிருந்து சற்றே குறைந்துள்ளது என்றது.

மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், நிறுவனத்திடம் 33 லட்சம் பயனர்களும் 71,000 வணிகர்களையும் இணைந்துள்ளதாக தெரிவித்தது.

செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி, மொபிக்விக் 18.35 கோடி பதிவு செய்யப்பட்ட பயனர்களையும் 47.1 லட்சம் வணிகர்களையும் கொண்டுள்ளது என்றது.

2026 நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த செலவுகள் ரூ.285.7 கோடியாக இருந்தன. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.286.8 கோடியாக இருந்தது.

கட்டண நுழைவாயில் செலவுகள் ரூ.133.9 கோடியாக இருந்தது. இதுவே நிதியாண்டின் 2-வது காலாண்டில் ரூ.134.6 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் ஊழியர் நலச் செலவுகள் ரூ.35.3 கோடியாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் காலாண்டில் ரூ.43.5 கோடியாக இருந்தது.

இதையும் படிக்க: அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா! இலக்கியத் திருவிழாவில் சுவாரசியம்!

காலாண்டு வருவாய் அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் 3% சரிவு!

மீண்டும் வெல்வோம்! நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! - முதல்வர் Stalin

தெரியாத 3 எழுத்து “பயம்” தெரிந்த 3 எழுத்து “வீரம்” - Seeman

ஹைதராபாத்தில் 4 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 6 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

SCROLL FOR NEXT