வணிகம்

ஸ்கிப்பர் நிறுவனத்தின் 2-வது காலாண்டு நிகர லாபம் 12% அதிகரிப்பு!

ஸ்கிப்பர் லிமிடெட் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.4% உயர்ந்து ரூ.37.03 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: பொறியியல் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான ஸ்கிப்பர் லிமிடெட் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.4% உயர்ந்து ரூ.37.03 கோடியாக உள்ளதாக இன்று தெரிவித்தது. இதுவே கடந்த வருடம் இதே காலத்தில் இது ரூ.32.93 கோடியாக இருந்தது.

செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13.7% அதிகரித்து ரூ.1,261.79 கோடியாக இருந்தது. அதே வேளையில் ஜூலை முதல் செப்டம்பர் முடிய உள்ள மாதங்களில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,265.86 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,113.11 கோடியாக இருந்தது.

பொறியியல் தயாரிப்புப் பிரிவு ரூ.997.37 கோடியுடன் முக்கிய வருவாய் பங்களிப்பாளராகத் தொடர்ந்தது, பாலிமர் தயாரிப்பு வணிகம் ரூ.115.35 கோடி வருவாய் பங்களித்தது. அதே வேளையில் உள்கட்டமைப்பு திட்ட வருவாய் ரூ.149.07 கோடியாகக் குறைந்தது.

இதனையடுத்து இந்த காலாண்டில் ஒரு பங்கிற்கான அடிப்படை வருவாய் ரூ.3.28 ஆக இருந்தது.

இதையும் படிக்க: டிரென்ட் 2-வது காலாண்டு லாபம் 11% உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிவிஎஸ் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

கிழக்கு மண்டலத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கக் கூடாது: ஆணையரிடம் கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா்களுடன் இந்திய தோ்தல் துணை ஆணையா் ஆலோசனை

9 பவுன் நகையுடன் ஊழியா் மாயம்

SCROLL FOR NEXT