முகப்பு
வணிகம்

தங்கம் விலை: காலை ரூ. 880, மாலை ரூ.520 உயர்வு

காலையில் ரூ. 880 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ. 520 உயர்ந்து இன்று மட்டும் சவரன் ரூ. 1,440 வரை உயர்ந்துள்ளது.

Updated On : 10 நவம்பர், 2025 at 11:55 AM
கோப்புப் படம்
பகிர்:

தங்கம் விலை இன்று (நவ. 10) மாலை சரவனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது.

காலை ரூ. 880 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ. 520 என இரண்டாவது முறையாக தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இதன்மூலம் இன்று ஒரே நாளில் ரூ. 1,440 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதேபோன்று வெள்ளி விலையும் ரூ. 2 உயர்ந்துள்ளது. காலையில் ரூ. 2 உயர்ந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ. 2 வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாகவே ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. இதன்படி இன்று காலை ரூ. 880 உயர்ந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ரூ. 520 வரை உயர்ந்துள்ளது.

இதன்மூலம் சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 11,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ. 91840க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் மாலையில் ரூ. 2 உயர்ந்து கிராம் ரூ. 169க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

summary

Gold silver price hit high

முழு கட்டுரையைப் படிக்க →