மும்பை: அமெரிக்க பணிநிறுத்த மசோதாவில் தென்பட்ட முன்னேற்றம் மற்றும் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையின் மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.88.57 ஆக நிலைபெற்றது.
உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி மற்றும் நெருங்கி வரும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை ஆகியவை உள்ளூர் பங்குச் சந்தையை ஆதரித்தாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், அதிகரித்த கச்சா எண்ணெய் விலை மற்றும் அன்னிய நிதி வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வை இது வெகுவாக பாதித்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.69 ஆக வர்த்தகமானது. இது இன்றைய இன்ட்ராடேவில் அதிகபட்சமாக சென்று ரூ.88.52 ஆகவும் பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.72ஆக சென்று அதன் முந்தைய முடிவிலிருந்து 16 காசுகள் அதிகரித்து ரூ.88.57 ஆக நிலைபெற்றது.
நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.73 ஆக இருந்தது.
இதையும் படிக்க: சரிந்து மீண்ட இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 335.97 புள்ளிகள் எழுச்சியுடன் நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.