புதுதில்லி: அரசுக்குச் சொந்தமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் சுமார் 20% சரிந்து ரூ.230.52 கோடியாக உள்ளது என்ற நிலையில் அதன் செலவுகள் அதிகரித்ததாக இது நிகழ்ந்தது என்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.286.90 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ஜூலை முதல் செப்டம்பர் வரையான நிதியாண்டில் ரூ.5,136.07 கோடியிலிருந்து ரூ.5,333.36 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், நிறுவனத்தின் கடந்த ஆண்டு செலவு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.4,731.52 கோடியிலிருந்து ரூ.5,015 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் பங்கின் விலை ரூ.317.70 ஆக வர்த்தகமான நிலையில், என்எஸ்இ-யில் ரூ.317.75 ஆக வர்த்தகமானது.
இதையும் படிக்க: ஜேபி பார்மாவின் நிகர லாபம் 19% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.