சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ் 25, பலரின் விருப்பமான சாதனமாக மாறியுள்ளது. ஆப்பிள் ஐ-போன் வைத்திருப்பதைப்போன்று கேலக்ஸி எஸ் 25 வைத்திருப்பதையும் பலர் விரும்புகின்றனர்.
அவ்வாறு கேலக்ஸி எஸ் 25 விரும்பிகளுக்கு அமேசானில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் விலையில் இருந்து ரூ. 20,300 வரை தள்ளுபடி பெறலாம்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சாக்சங் கேலக்ஸி எஸ் 25 விலை ரூ. 80,999 ஆக இருந்தது. தற்போது அமேசான் இணைய விற்பனை தளத்தில் ரூ. 63,690க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் உண்மை விலையில் இருந்து ரூ. 17,309 தள்ளுபடியுடனே விற்கப்படுவது உறுதியாகிறது.
மேலும், ஃபெடரல் வங்கி கடன் அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3,000 வரை கூடுதலாக தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்மூலம் கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனை ரூ. 60,690க்கு வாங்கலாம். இவ்வாறு வாங்கினால் ரூ. 20,309 வரை வாடிக்கையாளர்களால் சேமிக்க முடியும்.
இதோடு மட்டுமின்றி பழைய ஸ்மார்ட்போனை மாற்றிவிட்டு கேலக்ஸி எஸ் 25 ஸ்மார்ட்போனை தேர்வு செய்தால், இதன் விலை மேலும் குறைந்து ரூ. 44,050 க்கு வாங்கலாம். பழைய ஸ்மார்ட்போனின் நிலை மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் இந்த சலுகையில் மாற்றங்கள் வரலாம்.
கேலக்ஸி எஸ் 25 சிறப்புகள்
6.2 அங்குல அமோலிட் திரை
திரையில் செயலிகள் வேகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் புராசஸர் உடையது
12GB உள்நினைவகம் 512GB நினைவகம் கொண்டது.
4000 mAh பேட்டரி திறன், 25W வேகமாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது
50MP ஐஓஎஸ் முதன்மைஒ கேமரா
12MP அல்ட்ரா வைட் கேமரா
10MP டெலிபோட்டோ கேமரா, மூன்று மடங்கு அதிகமாக ஜூம் செய்ய இயலும்
கருப்பு, தங்கம், சிவப்பு, நீலம், சில்வர், வெளிர் நீலம், இளம்பச்சை என 7 நிறங்களில் கிடைக்கும்.
இதையும் படிக்க | டாடா மோட்டாா்ஸ் விற்பனை 27% உயா்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.