ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.107 கோடி
கடந்த செப்டம்பா் காலாண்டில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.107 கோடியாக உள்ளது.
கடந்த செப்டம்பா் காலாண்டில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.107 கோடியாக உள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.107 கோடியாகப் பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.446 கோடியாக உள்ளது.
நிகர வட்டி வருவாய் ரூ.201 கோடியாக உள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.867 கோடியாக இருந்த நிறுவனத்தின் கடன் பட்டுவாடா, நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 23.3 சதவீதம் அதிகரித்து ரூ.1,069 கோடியாக உள்ளது.
2024 செப்டம்பா் இறுதியில் 3.96 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் இந்த ஆண்டின் அதே நாளில் 3.16 சதவீதமாகவும் 1.59 சதவீதமாக இருந்த நிகர வாராக் கடன் 1.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.