கோப்புப் படம் 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.73 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.73 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 காசுகள் சரிந்து ரூ.88.73 ஆக நிறைவடைந்தது. டாலரின் வலிமை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக அமைந்தது.

பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மீட்சி, ரூபாயின் மதிப்பை சரிந்த மட்டத்திலிருந்து சற்றே ஆதரித்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.70 ஆக தொடங்கி, பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.75ஐ தொட்டு அதன் முந்தைய முடிவிலிருந்து 3 காசுகள் சரிந்து ரூ.88.73ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

காலிறுதியில் அல்கராஸ், ஸ்வெரெவ்!

சிந்துபூந்துறையில் திமுக பொதுக்கூட்டம்

குடியரசு தின விழா: நெல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

வி.கே. மழலையா் தொடக்கப் பள்ளி விளையாட்டு விழா

SCROLL FOR NEXT