வணிகம்

மும்பையில் சி.என்.ஜி. குழாய் சேதத்தால் கேஸ் விநியோகம் பாதிப்பு!

மும்பையில் பிரதான குழாய் சேதமடைந்ததால் இன்று சி.என்.ஜி. விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹாங்கர் கேஸ் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் பிரதான குழாய் சேதமடைந்ததால் சி.என்.ஜி. விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹாங்கர் கேஸ் இன்று தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்துகள், ஓலா மற்றும் உபர் உள்ளிட்ட சில நிறுவனங்களால் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்சிகளுக்கும் சி.என்.ஜி. விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் தொடர்வதை உறுதி செய்யும் வகையில், குடியிருப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே மற்றும் நவி மும்பை முழுவதும் உள்ள சி.என்.ஜி. நிலையங்கள், பொதுப் போக்குவரத்துக்கான பிரத்யேக சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றுக்கு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் இயங்காமல் போகலாம் என்றும் அதே வேளயில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் மாற்று எரிபொருளுக்கு மாறுமாறு மஹாங்கர் கேஸ் அறிவுறுத்தியுள்ளது.

சேதம் சரிசெய்யப்பட்டு விநியோகம் சரியானதுடன் மஹாங்கர் கேஸ் நெட்வொர்க் முழுவதும் எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக உள்ளடக்கத்துடன் கூடிய பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா உதாரணம்: ஐ.நா. அதிகாரி

பொன்னமராவதி அருகே பெண்கள் கபடிப்போட்டி

72 கோயில்கள்..! சபரிமலை பக்தா்களுக்காக சிறப்பு ஆன்மிக சுற்றுலாத் திட்டங்கள்! கேஎஸ்ஆா்டிசி அறிமுகம்!

உதவிப் பேராசிரியா்கள் உண்ணாவிரதம்

வால்பாறை-சாலக்குடி இடையே பாலம் கட்டுமானப் பணி: இன்று முதல் போக்குவரத்து தடை

SCROLL FOR NEXT