ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 9, ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 9 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
விவோ, ஒன்பிளஸ் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், அவர்களுக்குப் போட்டியாக ஓப்போவும் இரு தயாரிப்புகளை களமிறக்கவுள்ளது.
இவற்றின் கேமரா வடிவம் ரெட்மி ஸ்மார்ட்போன்களில் இருப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை விட விலை கூடுதலாகவே உள்ளது.
விவோ, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்குப் போட்டியாக வரவுள்ளதால், இவற்றின் விலையும் இந்த இரு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓப்போ ஃபைன்ட் சீரிஸ் ஆரம்ப விலை ரூ. 74,999. ஸ்மார்ட்போன் உள்ளடங்கத்தின் சிறப்பம்சங்களைப் பொருத்து இந்த விலையில் மாற்றங்கள் இருக்கும்.
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 9 விலை
12GB+256GB நினைவகம் - ரூ. 74,999
16GB+512GB நினைவகம் - ரூ. 84,999
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் ப்ரோ விலை
16GB+512GB நினைவகம் - ரூ. 1,09,999
நவம்பர் 21 ஆம் தேதி முதல் இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே சந்தையில் கிடைக்கும். சமீபத்தில் டெலிகன்வர்ட்டர் அம்சத்துடன் ரூ. 29,999க்கு புதிய ஸ்மார்ட்போனை ஓப்போ அறிமுகம் செய்திருந்தது.
பொதுவாக உள்ள சிறப்பம்சங்கள்
இரு ஸ்மார்ட்போன்களிலுமே மீடியாடெக்டைமன்சிட்டி 9500 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்டிராய்டு 16 பயன்படுத்தப்படுகிறது.
வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் முறையில் 10W ரிவர்ஸ் சார்ஜ் ஆகும்.
அமோலிட் திரை கொண்டது.
திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
தூசி மற்றும் நீர்ப்புகாத்தன்மைக்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன.
தனித்த சிறப்பம்சங்கள்
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் ப்ரோ 6.78 அங்குல திரை கொண்டது. ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் 6.59 அங்குல திரை உடையது.
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் ப்ரோ 200MP டெலிபோட்டோ கேமரா உடையது. ஓப்போ ஃபைன்ட் எக்ஸ், சோனி சென்சாருடன் கூடிய 50MP கேமரா கொண்டது.
ஓப்போ ஃபைன்ட் எக்ஸ் ப்ரோ 7500mAh பேட்டரி திறன் கொண்டது. ஓப்போ ஃபைன்ட் எக்ஸில் சற்று குறைவாக 7025mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பெரிய திரை... நத்திங் 3ஏ லைட் ஸ்மார்ட்போன் நவ. 27-ல் அறிமுகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.