சென்னை: வேளாண் ஊட்டச்சத்து மற்றும் உர நிறுவனமான ஸ்பிக் லிமிடெட், ஜூலை முதல் செப்டம்பர் 2025 வரையான காலாண்டில் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் ரூ.53.10 கோடி ஈட்டியதாக தெரிவித்தது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (SPIC) கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.31.01 கோடியாக இருந்ததாக தெரிவித்தது.
நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.111.37 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இது ரூ.82.36 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வு செய்யப்பட்ட 2-வது காலாண்டில் நிறுனத்தின் மொத்த வருமானம் ரூ.842.82 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.761.22 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.1,517.59 கோடியிலிருந்து அதிகரித்து, செப்டம்பர் 2025 முடிய உள்ள அரையாண்டில் அதன் மொத்த வருமானம் ரூ.1,640.97 கோடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.