கோப்புப்படம் IANS
வணிகம்

6 நாள் ஏற்றத்திற்குப் பிறகு சரிவில் பங்குச்சந்தை! ஏன்?

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச் சந்தைகள் இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,042.37 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 182.91 புள்ளிகள் குறைந்து 84,768.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.05 புள்ளிகள் குறைந்து 25,950.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மஹிந்திரா ஆகியவை நிஃப்டியில் அதிக சரிவைச் சந்தித்தன.

அதே நேரத்தில் மேக்ஸ் ஹெல்த்கேர், ஆக்சிஸ் வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வருகின்றன.

சென்செக்ஸில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடக் வங்கி, எல்&டி, எம்&எம், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக், சன் பார்மா மற்றும் டைட்டன் கம்பெனி ஆகியவை சரிவைச்(0.5 முதல் 1 சதவீதம் வரை) சந்தித்து வரும் நிறுவனங்களாகும். சென்செக்ஸில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, எடர்னல், எஸ்பிஐ ஆகியவை மட்டுமே உயர்ந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.6% சரிந்தன.

பங்குச்சந்தை சரிவு ஏன்?

பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 96,000 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இதுவே குறைவானதாகும். கடந்த அக்டோபரில் பிட்காயின் மதிப்பு அதிகரித்த நிலையில் தற்போது 23% வரை குறைந்துள்ளது.

சீனாவின் சில்லறை விற்பனை மிகவும் குறைந்துள்ளது. இது உலக சந்தைகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள சீன பங்குகள் விலை கடுமையாக குறைந்துள்ளன. இது இந்திய பங்குச்சந்தையிலும் இன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தற்போது முடிவுக்கு வந்துள்ள அமெரிக்க பொருளாதார முடக்கமும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரவிருப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகள், கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்டவையும் காரணமாகும்.

எனினும் பங்குச்சந்தை வர்த்தகம் மீண்டெழுந்து இன்று நேர்மறையில் நிலைபெற வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை சரிவுடன் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Stock Market Updates: Sensex slips 200 pts, Nifty above 25,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஷஸ் தொடருக்கான பந்துவீச்சு பயிற்சியில் மார்க் வுட்!

குடும்பச் சண்டை.. மௌனம் கலைத்த லாலு பிரசாத்!

கள்ளச் சிரிப்பில் அந்த வெள்ளைச் சிரிப்பில்... திவ்யா துரைசாமி!

அடுத்த 5 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

பாகிஸ்தானில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT