வாட்ஸ்ஆப் 
வணிகம்

விரைவில் வாட்ஸ்ஆப் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதி!

விரைவில் வாட்ஸ்ஆப் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதி வரவிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சமூக வலைத்தளங்களில் மிகவும் முன்னணியில் மற்றும் பலராலும் பயன்பாட்டில் இருந்து வரும் வாட்ஸ்ஆப், அதன் பயனர்களின் தேவையை அறிந்து பல புதிய அப்டேட்களை செய்து வருகிறது.

அந்த வகையில், தற்போது வாட்ஸ்ஆப் அழைப்புகளை, முன்கூட்டியே திட்டமிட்டு ஷெட்யூல் செய்யும் வசதியை ஏற்படுத்தி வருகிறது.

குடும்பத்தினருடன் குறிப்பிட்ட நேரத்தில் பேச வேண்டும், அலுவலக குழு விவாதங்களை மேற்கொள்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

சாதாரணமாக வாட்ஸ்ஆப் அழைப்பு வசதியிலிருந்தே, அழைப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்து கொள்ளலாம், இதனால் அனைவருக்கும் தகவல்களை அனுப்பி, பிறகு குரூப் அழைப்புகளை மேற்கொள்வதிலிருக்கும் சிக்கல்கள் தீரும். அதற்கு மாறாக, அழைப்பை ஷெட்யூல் செய்துவிட்டால், அதுவே, அழைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பி, முன்கூட்டியே நினைவூட்டவும் செய்யுமாம்.

அழைப்புகளுக்கான இணைப்புகளுடன் காலண்டரை இணைப்பது, அதனை மற்றவர்களுக்கு பகிர்வதும் இனி சாத்தியப்படும்.

இது மட்டுமல்ல, கையை உயர்த்தும் டூல், குழு அரட்டைகளின்போது நண்பர்கள் அல்லது அலுவலக சகாக்கள் அதிகம் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அழைப்புகளை முன்கூட்டியே ஷெட்யூல் செய்வதோடு மட்டுமல்லாமல் அது பற்றிய தகவல்களை பதிவு செய்யும் வசதியும் உருவாக்கப்பட்டுளள்து.

அதாவது, அழைப்பை ஷெட்யூல் செய்துவிட்டு, அதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்துவிட்டால் போதும், வாட்ஸ்ஆப் அழைப்பில் பங்கேற்க வேண்டியவர்களுக்கு தகவல்களை அனுப்பிவிடும்.

எனவே, முன்கூட்டியே அனைவரும் இந்த குழு அழைப்பு குறித்து அறிந்து கொண்டு பரபரப்பு இல்லாமல் குழு அழைப்புகள் தொடங்கி நிறைவு பெற வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

ரெட்மி வடிவில் ஓப்போவின் புதிய இரு ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் எக்ஸ் சமூக வலைத்தளம் முடங்கியது

2022-இல் ஆர்ஜென்டீனாவை கலங்கடித்த நெதர்லாந்து உலகக் கோப்பைக்குத் தேர்வு!

SCROLL FOR NEXT