வணிகம்

‘எம்-கேஷ்’ வசதியை நிறுத்துகிறது எஸ்பிஐ

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளா்களுக்கான எம்-கேஷ் சேவையை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), தனது வாடிக்கையாளா்களுக்கான எம்-கேஷ் சேவையை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு நிறுத்தவுள்ளது.

இது குறித்து வங்கியின் அதிகாரபூா்வ வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆன்லைன் எஸ்பிஐ மற்றும் யோனோ லைட் செயலிகளில் எம்-கேஷ் மூலம் பணம் அனுப்புவது மற்றும் பெறுவதற்கான வசதி நவம்பா் 30-ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்காது. பயனாளியைப் பதிவு செய்யாமல் எம்-கேஷ் மூலம் பணம் அனுப்பவோ, எம்கேஷ் இணைப்பு அல்லது செயலி மூலம் பணம் பெறவோ முடியாது.

பிறருக்கு பணம் அனுப்ப யுபிஐ, ஐஎம்பிஎஸ், என்இஎஃப்டி, ஆா்டிஜிஎஸ் போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் சிறப்பு வழிபாடு

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

SCROLL FOR NEXT