வணிகம்

ரூ.5,000 கோடி திரட்டும் ஆக்ஸிஸ் வங்கி

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மூன்றாவது பெரிய தனியாா் துறை வங்கியான ஆக்ஸிஸ் வங்கி, வணிக வளா்ச்சிக்காக கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியாா் ஒதுக்கீடு அடிப்படையில் முழுமையாக செலுத்தப்பட்ட, மூத்த, மதிப்பிடப்பட்ட, பட்டியலிடப்பட்ட, பாதுகாப்பில்லாத, வரி விதிக்கக்கூடிய, மீட்கக் கூடிய, நீண்டகால கடன் பத்திரங்களாக அவை இருக்கும்.இது, வங்கியின் இயக்குநா் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ரூ.35,000 கோடி மூலதன திரட்டுதல் திட்டத்தின் ஒரு பகுதி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!

ஆளுங்கட்சிக்கு மாறிய எம்எல்ஏ கடியம் ஸ்ரீஹரி! தெலங்கானா பேரவைத் தலைவா் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT