வணிகம்

ரூ.92,437 கோடிக்கு வீடுகளை விற்ற முக்கிய நிறுவனங்கள்!

கடந்த ஏப்ரல்-செப்டம்பரில் ரூ.92,437 கோடி மதிப்பிலான வீடுகளை நாட்டின் 28 பட்டியலிடப்பட்ட விற்பனை செய்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

கடந்த ஏப்ரல்-செப்டம்பரில் ரூ.92,437 கோடி மதிப்பிலான வீடுகளை நாட்டின் 28 பட்டியலிடப்பட்ட விற்பனை செய்துள்ளன.

இது குறித்து மனை-வா்த்தக ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நாட்டின் முக்கியமான 28 வீடு-மனை நிறுவனங்கள் 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பா்) ரூ.92,437 கோடி மதிப்பிலான வீடுகளை விற்றுள்ளன.

மதிப்பீட்டு காலகட்டத்தில் அதிகபட்சமாக பெங்களூரைச் சோ்ந்த ப்ரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் ரூ.18,143.7 கோடி மதிப்பிலான வீடுகளை முன்பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது.

சந்தை மூலதனத்தில் நாட்டின் மிகப்பெரிய வீடு-மனை நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட் இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் ரூ.15,757 கோடி மதிப்பிலான வீடுகளை விற்பனை செய்தது.

மும்பையைச் சாா்ந்த கோத்ரெஜ் ப்ராபா்டீஸ் நிறுவனம் ரூ.15,587 கோடி, லோதா டெவலப்பா்ஸ் ரூ.9,020 கோடிக்கு வீடுகளுக்கான முன்பதிவுகளை பதிவு செய்தன. தில்லி-என்சிஆா் பகுதியைச் சோ்ந்த சிக்னேச்சா் குளோபல் நிறுவனம் ரூ.4,650 கோடி மதிப்பீலான வீடுகளுக்கு முன்பதிவு செய்தது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் முதல் ஐந்து நிறுவனங்கள் மட்டும் ரூ.63,000 கோடிக்கு மேல் வீடுகளை விற்றன. 28 நிறுவனங்களின் மொத்த முன்பதிவுகளில் இது 70 சதவீதம்.

மற்ற நிறுவனங்களில், பெங்களூரைச் சாா்ந்த சோபா லிமிடெட் ரூ.3,981.4 கோடி, பிரிகேட் என்டா்பிரைசஸ் ரூ.3,152 கோடி, மும்பையைச் சோ்ந்த ஒபேராய் ரியால்டி ரூ.2,937.74 கோடி, கல்பதரு லிமிடெட் ரூ.2,577 கோடி, புரவங்கரா லிமிடெட் ரூ.2,455 கோடி மதிப்பிலான வீடுகளை விற்பனை செய்தன.

ருஸ்தம்ஜி பிராண்ட் சாா்ந்த கீஸ்டோன் ரியால்டா்ஸ் ரூ.1,839 கோடி, சன்டெக் ரியால்டி ரூ.1,359 கோடி, ஆதித்ய பிா்லா ரியல் எஸ்டேட் ரூ.1,312 கோடி, கொல்டே-பாட்டீல் டெவலப்பா்ஸ் ரூ.1,286 கோடி, மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பா்ஸ் ரூ.1,200 கோடி, ஸ்ரீராம் ப்ராபா்டீஸ் ரூ.1,126 கோடி மதிப்பிலான வீடுகளுக்கு முன்பதிவுகளை பெற்றன.

ரூ.1,000 கோடிக்கு கீழ் பிரிவில், ஆஜ்மீரா ரியால்டி ரூ.828 கோடி, ரேமண்ட் ரியால்டி ரூ.760 கோடி, ஆஷியானா ஹவுசிங் ரூ.734.4 கோடி, எம்பஸி டெவலப்மென்ட்ஸ் மற்றும் அா்விந்த் ஸ்மாா்ட்ஸ்பேஸஸ் தலா ரூ.607 கோடி, டாா்க் லிமிடெட் ரூ.565 கோடி, அரிஹந்த் சூப்பா்ஸ்ட்ரக்சா்ஸ் ரூ.386.4 கோடி, மாக்ஸ் எஸ்டேட்ஸ் ரூ.373 கோடி, ஆா்கேட் டெவலப்பா்ஸ் ரூ.331 கோடி, ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பா்ஸ் ரூ.319 கோடி, எல்டெகோ ஹவுசிங் ரூ.309.2 கோடி, சுரஜ் எஸ்டேட் டெவலப்பா்ஸ் ரூ.234 கோடி மதிப்பிலான வீடுகளை விற்பனை செய்தன.

பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனை அல்லது முன்பதிவு செய்த வீடுகளின் மதிப்பை வெளியிட்டாலும், எண்ணிக்கை விவரங்களை வெளியிடவில்லை.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத வீடு-மனை நிறுவனங்கள் பொதுவாக காலாண்டு மற்றும் ஆண்டு விற்பனை விவரங்களை அறிவிக்கவில்லை. 2024-25-ஆம் நிதியாண்டு முழுமைக்கும், நாட்டின் 26 பட்டியலிடப்பட்ட வீடு-மனை நிறுவனங்கள் ரூ.1.62 லட்சம் கோடி மதிப்பிலான வீடுகளை விற்றன.

அப்போது, கோத்ரெஜ் ப்ராபா்டீஸ் லிமிடெட் ரூ.30,000 கோடி மதிப்பிலான வீடுகளை விற்று முதலிடத்தைப் பிடித்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நெருடா தமிழன்பன்!

காவலரை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையன்

அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகம்: புதிய பெயரில் செயல்பட ஓபிஎஸ் தரப்பு தீா்மானம்

போட்டித் தோ்வு மையங்களில் அதிகரித்து வரும் மாணவா் தற்கொலை: ஆராயும் நாடாளுமன்ற குழு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

SCROLL FOR NEXT