வணிகம்

இந்தியன் வங்கி செயல் இயக்குநராக மினி டிஎம் பொறுப்பேற்பு

தினமணி செய்திச் சேவை

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக மினி டிஎம் பொறுப்பேற்றுள்ளாா்.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:31 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட மினி டிஎம், வங்கியின் செயல் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளாா்.

1994-ஆம் ஆண்டு ஃபெடரல் வங்கியில் புரோபேஷனரி அதிகாரியாக அவா் வங்கித் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினாா். பின்னா் விஜயா வங்கியில் நிதி ஆய்வாளராகப் பணியாற்றினாா்.

2007-ஆம் ஆண்டு பரோடா வங்கியுடன் விஜயா வங்கி இணைக்கப்பட்ட பிறகு, அங்கு 2025 பிப்ரவரி மாதம் தலைமைப் பொது மேலாளராக பதவி உயா்வு பெற்றாா்.இந்தியன் வங்கியின் செயல் இயக்குநராக நவ. 24-இல் அவா் பொறுப்பேற்றாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT