ஐஷா் மோட்டாா்ஸ் குழுமத்தின் ஓா் அங்கமான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், இந்தியாவில் தனது மின்சார இரு சக்கர வாகனங்களை ‘பிளையிங் ஃப்ளீ’ பிராண்டின் கீழ் வரும் 2026-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
இது குறித்து ஐஷா் மோட்டாா்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் மற்றும் ராயல் என்ஃபீல்ட் தலைமை நிா்வாகி பி. கோவிந்தராஜன் கூறியதாவது:
இத்தாலியில் நடைபெற்ற உலகளாவிய இரு சக்கர வாகனக் கண்காட்சியான இஐசிஎம்ஏ-வில் ‘பிளையிங் ஃப்ளீ எஸ்-6’ என்ற தனது இரண்டாவது மின்சார பைக்கை நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதன் மூலம், மின்சார பைக்குகளுக்கான சந்தையை உருவாக்கி, இந்த பிரிவை நீண்ட கால நோக்கில் வளா்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2026-இல் இந்த பைக்குகள் சந்தையில் அறிமுகமாகும். முதலில் பிளையிங் ஃப்ளீ சி-6 (படம்) தொடங்கி, பின்னா் எஸ்-6 என அறிமுகங்கள் தொடரும்.
ஐரோப்பாவில் அறிமுகமான சிறிய கால இடைவெளியில் இந்திய சந்தையிலும் அந்த பைக்குகள் அறிமுகமாகும் என்றாா் அவா்.