சொகுசு காரை விலை கொடுத்து வாங்குவதில் மட்டுமல்ல, அதற்கு மிகவும் அழகான எளிமையான பதிவு எண்களையும் பலரும் பணம் கொடுத்து வாங்குவார்கள். இது லட்சத்தைத் தாண்டி தற்போது கோடியை எட்டியிருக்கிறது.
அந்த வகையில், மிகவும் அழகான பதிவு எண்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை ஏலம் விடப்பட்டன. அதில், ஒரே எண் கோரி கிட்டத்தட்ட 45 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அந்த எண் ரூ.1.17 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
வாரந்தோறும் ஹரியாணாவில், மிக அழகான பதிவு எண்களை ஏலம் விடுவது நடைமுறை. வெள்ளி முதல் திங்கள் வரை பதிவு எண்கள் கோரி விண்ணப்பிக்கலாம். பிறகு ஏலம் விடப்பட்டு புதன்கிழமை அறிவிப்பு வெளியாகும். இணையதளம் மூலம் ஏலம் விடப்படும்.
இதில், எச்ஆர்88 பி8888 என்ற பதவு எண் கோரி 45 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அடிப்படை விலை 50 ஆயிரத்தில் ஆரம்பித்து ஏலம் விடப்பட்டு கடைசியாக ஒருவர் இந்த எண்ணை ரூ.1.17 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். இதில் எச்ஆர் என்பது ஹரியாணாவின் குறியீடு. 88 என்பது, ஒரு பகுதியின் பதிவு எண். இதில் 8888 என்பதுதான் மிகவும் அழகான எண்ணாக அமைந்துள்ளது. இதன் மூலம், அந்த பதிவு எண்ணை கார் பலகையில் பதிவு செய்யும்போது, ஒரே எழுத்து அடுத்தடுத்து வருவது போல இருக்கும்.
எனவே, இந்த எண்ணை இத்தனை ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார் ஒருவர்.
கடந்த வாரம் எச்ஆர் 22 டபிள்யு 2222 என்ற எண் ரூ.37.91 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டிருந்தது. கேரளத்திலும் கேஎல் 07 டிஜி 0007 என்ற எண்ணை ரூ.45.99 லட்சத்துக்கு கேரளத்தைச் சேர்ந்தவர் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.