வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை என்ற நிலையிலும் தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக முடிவடைந்தது.

வர்த்தக பதட்டங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால், இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் உள்ளிட்டவை அதன் எல்லா நேரத்திலும் இல்லாத குறைந்த மட்டத்தில் இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் விசா கட்டண உயர்வு ஆகியவற்றின் அழுத்தமானதும் இந்திய ரூபாய் மதிப்பை வெகுவாக சரிய வைத்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 88.68 ஆக தொடங்கி, இன்ட்ராடேவில் குறைந்தபட்சமாக 88.85 ஐ தொட் நிலையில், முடிவில் ரூ.88.78 ஆக அதன் முந்தைய முடிவிலிருந்து 7 காசுகள் குறைந்தது.

நேற்றியை முன்தினம் (புதன்கிழமை) இந்திய ரூபாய் அதன் குறைந்த அளவிலிருந்து 9 காசுகள் மீண்டு அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ88.71 ஆக நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) காந்தி ஜெயந்தி மற்றும் தசரா முன்னிட்டு பங்குச் சந்தை, அந்நியச் செலாவணி உள்ளிட்ட சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக உயர்வுடன் நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT