மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் நேர்மறையான போக்கில் தொடங்கின. நிஃப்டி 50 அதன் முந்தைய முடிவான 25,077.65 புள்ளிகளிருந்து 25,085.30 ஆக தொடங்கி 25,182.95 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில், காலை 10 மணிக்கு 105.30 புள்ளிகள் உயர்ந்தது.
சென்செக்ஸ் அதன் முந்தைய முடிவான 81,790.12 புள்ளிகளிருந்து 81,883.95 ஆக தொடங்கி 82,148.80 புள்ளிகளாக இருந்தது 358.68 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.
குறிப்பாக இன்று ஆட்டோ, நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் & எரிவாயு, எரிசக்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியதால் நிஃப்டி 25,100க்கு மேல் சென்று முடிவடைந்தது.
வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 136.63 புள்ளிகள் உயர்ந்து 81,926.75 புள்ளிகளாகவும், நிஃப்டி 30.65 புள்ளிகள் உயர்ந்து 25,108.30 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.4% அதிகரித்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடு சற்று சரிவுடன் முடிவடைந்தன.
நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல், பாரதி ஏர்டெல், எடர்னல், ஐஷர் மோட்டார்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகியவை உயர்ந்த நிலையில் டிரெண்ட், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா நுகர்வோர் மற்றும் எச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 3.184 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,433 பங்குகள் உயர்ந்தும் 1,634 பங்குகள் சரிந்தும் 117 பங்குகள் மாற்றமின்றி நிறைவடைந்தன.
துறை வாரியாக எரிசக்தி, எண்ணெய் & எரிவாயு, மருந்து, தொலைத்தொடர்பு, நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்டவை 0.3 முதல் 2% வரை உயர்ந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், டிரென்ட் பங்குகளை மோர்கன் ஸ்டான்லி 'அதிக மதிப்பு' என்று தெரிவித்ததால் 2% சரிந்தன. சத்தீஸ்கர் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷனுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோல் இந்தியா கையெழுத்திட்டதால் அதன் பங்குகள் உயர்ந்தன.
இரண்டாவது காலாண்டில் உலகளாவிய வணிகம் 11.8% உயர்ந்ததால் பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்ந்தன. 2வது காலாண்டு வருவாய் 23% உயர்ந்ததால் மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் பங்கு விலை 2% உயர்வுடன் நிறைவு.
மேற்கு சென்னையில் பிரீமியம் குடியிருப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் பிரிகேட் எண்டர்பிரைசஸ் பங்குகள் 4% அதிகரித்தன. செபி தீர்வு உத்தரவிற்குப் பிறகு ஃபினோ பேமென்ட் வங்கியின் பங்குகள் 4% அதிகரிப்பு.
கொரியாவை தளமாகக் கொண்ட எஸ்கே என்மோவ் கோ உடன் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தை செயல்படுத்தியதால் கேப்ரியல் இந்தியா பங்குகள் 52 வார உச்சத்தை தொட்டது.
நைக்கா, யுஎன்ஓ மிண்டா, ஹீரோ மோட்டோகார்ப், ஆஸ்டர் டிஎம் ஹெல்த், ஹெச்பிசிஎல், கனரா வங்கி, ஏபி கேபிடல், முத்தூட் ஃபைனான்ஸ், என்எல்சி இந்தியா, இந்துஸ்தான் காப்பர் உள்ளிட்ட 150 நிறுவனஙளின் பங்குகள் பிஎஸ்இ-யில் கிட்டத்தட்ட 52 வார உச்சத்தை எட்டியது.
இதையும் படிக்க: காா் விற்பனையில் உச்சம் தொட்ட டாடா மோட்டாா்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.