டெய்கின் 
வணிகம்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

ஜப்பானிய நிறுவனமான டெய்கின் ஹரியாணாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

சண்டீகர்: ஜப்பானிய நிறுவனமான டெய்கின், ஹரியாணாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் என்று மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. இந்த நிறுவனமானது மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நிலையான தொழில்துறை தீர்வுகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்தும்.

உயர்நிலைக் குழுவுடன் ஜப்பானின் ஒசாகாவில், அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரையிலும், அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் நயாப் சிங் சைனி முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஹரியாணாவில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவ ரூ.1,000 கோடி முதலீடு செய்யும், இது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹரியாணாவின் தொழில்கள் மற்றும் வணிகத் துறை ஆணையரும் செயலாளருமான அமித் குமார் அகர்வால் மற்றும் டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிர்வாக இயக்குநர் ஷோகோ எண்டோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

Japanese conglomerate Daikin will invest Rs 1,000 crore in Haryana to set up a research and development (R&D) centre which will focus on the development of advanced technologies and sustainable industrial solutions, the state government said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வி உதவித் தொகை வந்துள்ளதாகக் கூறி 9 மாதங்களில் ரூ.50 லட்சம் மோசடி

கதவடைப்பு போராட்டம்: கிரில் தயாரிப்பாளா்கள் சங்கம் அறிவிப்பு

நடந்தாய் வாழி காவேரி திட்டத்தின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

பொதுப் பிரச்னைக்கு கட்டண வசூலில் ஈடுபட்ட மின்சார வாரியம்

திருப்பூா் காட்டன் மாா்க்கெட் கடைகளின் தனி ஏல தீா்மானம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT