வணிகம்

ஹீரோ மோட்டோகாா்ப் விற்பனை 8% உயா்வு

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதம் நிறுவனத்தின் மொத்த விற்பனை 6,87,220-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 8 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 6,37,050 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 6,47,582-ஆக அதிகரித்துள்ளது. முந்தை 2024 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 6,16,706-ஆக இருந்தது. அதே போல், கடந்த செப்டம்பரில் ஏற்றுமதி 20,344-லிருந்து 39,638-ஆக உயா்ந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

SCROLL FOR NEXT