சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றது. இதில், ஐடி, பார்மா பங்குகள் நல்ல லாபத்தைப் பெற்றன.
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 135.65 புள்ளிகள்(0.54 சதவிகிதம்) உயர்ந்து 25,181.80 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 398.45 புள்ளிகள் (0.49 சதவிகிதம்) உயர்ந்து 82,172.10 புள்ளிகளில் நிறைவடைந்தது.
காலாண்டு வருவாயையொட்டி ஹெச்.சி.எல்.டெக், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா போன்ற ஐடி பங்குகள் கணிசமான உயர்வைப் பெற்றன.
டிசிஎஸ்ஸின் லாபம் 1.39 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,075 கோடியாகவும், வருவாய் 2.39 சதவிகிதம் அதிகரித்து ரூ.65,799 கோடியாகவும் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்செக்ஸில், டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 2.65 சதவிகிதம் உயர்ந்தன. ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா மற்றும் டிசிஎஸ் ஆகியவை முக்கிய லாபத்தைப் பெற்றன.
இன்ஃபோசிஸ் கிட்டத்தட்ட 1 சதவிகிதம் உயர்ந்தது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0.78 சதவிகிதம் உயர்ந்தது. இருப்பினும், ஆக்சிஸ் வங்கி, டைட்டன், மாருதி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்தன.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.75 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.18 சதவீதமும் உயர்ந்தன. அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் 2,099 பங்குகள் உயர்வையும், 2,080 பங்குகள் சரிவையும் சந்தித்தன.
கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.23 சதவிகிதம் குறைந்து 66.08 அமெரிக்க டாலராக இருந்தது.
கடந்த வாரத்தில் முதல் மூன்றுநாள்கள் உயர்வுடன் இருந்த பங்குச்ச் சந்தை நேற்றைய வர்த்தகத்தில் சரிவைச் சந்திந்தது. இன்று மீண்டும் உயர்வுடன் நிறைவுபெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.