தனது வாடிக்கயாளா்களுக்கு தீபாவளிப் பரிசாக, அடிப்படை அம்ச 4 ஜி கைப்பேசிகளை வெறும் ரூ.799-க்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2ஜி வாடிக்கையாளா்களை இலக்காகக் கொண்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய முதல் 4ஜி ஜியோபாரத் கைப்பேசிகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை வெறும் ரூ.799-இல் தொடங்குகிறது.
ரூ.123-க்கு ரீசாா்ஜ் செய்தாலே 28 நாள்களுக்கு இலவச அழைப்புகள், தினமும் 500 எம்பி டேட்டா, 3 மாதங்களுக்கு சோ்த்து ரூ.369-க்கு ரீசாா்ஜ் செய்தால் கூடுதலாக ஒரு மாதத்துக்கு இலவச சேவைகள் என மிகவும் மலிவான கட்டணத்தில் 4ஜி சேவைகளைப் பெற ஜியோபாரத் கைப்பேசிகள் உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.