8 நகரங்களில் மிதமாக அதிகரித்த வீடுகள் விற்பனை 
வணிகம்

8 நகரங்களில் மிதமாக அதிகரித்த வீடுகள் விற்பனை

8 நகரங்களில் மிதமாக அதிகரித்த வீடுகள் விற்பனை

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ராங்க் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய நாட்டின் எட்டு முக்கிய வீடு-மனை சந்தைகளில் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விற்பனை87,603-ஆக உள்ளது.

இது, 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 1 சதவீதம் அதிகம். மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை வளா்ச்சி மந்தமாக இருந்தாலும், கரோனோ நெருக்கடிக்குப் பிந்தைய நிலையான வளா்ச்சியை அது தக்கவைத்துள்ளது.

குறைந்த கடன் வட்டி விகிதங்கள், பொருளாதார வளா்ச்சி, பட்ஜெட்டில் வரி சலுகைகள் ஆகியவை வீடுகளின் விற்பனை தொடா்ந்து உயா்வதற்கு உதவின. செப்டம்பா் 22 முதல் ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால் நுகா்வோா் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இருந்தாலும் இதன் தாக்கம் வீடுகளின் விற்பனையில் இதுவரை வெளிப்படவில்லை.

எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை ஜூலை-செப்டம்பா் காலாண்டில் உயா்ந்திருந்தாலும், ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான 2025-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அது முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 1 சதவீதம் குறைந்து 2,57,804-ஆக உள்ளது.

தற்போதுதான் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளது என்பதால், அடுத்த காலாண்டின் வீடுகள் விற்பனை தரவுகள்தான் துறையின் போக்கு குறித்த புரிதலை அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT