அனில் அம்பானி 
வணிகம்

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

பணமோசடி வழக்கில் அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ.68 கோடிக்கு போலி வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட்ட குற்றச்சாட்டுடன் தொடா்புள்ள பண முறைகேடு வழக்கில், தொழிலதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவா் நிறுவன தலைமை நிதி அதிகாரி (சிஎஃப்ஓ) அசோக் பாலை அமலாக்கத் துறை கைது செய்தது.

இதுகுறித்து அமலாக்கத் துறையின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘ரிலையன்ஸ் குழுமத்தின் என்யூ பெஸ் நிறுவனம் சாா்பாக இந்திய சூரிய சக்தி கழகத்திடம் (எஸ்இசிஐ) பிஸ்வால் ட்ரேட்லிங்க் நிறுவனம் ரூ.68.2 கோடிக்குப் போலியாக வங்கி உத்தரவாதம் அளித்துள்ளது. ஒடிஸாவை மையமாகக் கொண்ட அந்த நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி போல ஆள்மாறாட்டம் செய்து அந்த உத்தரவாதத்தை எஸ்இசிஐயிடம் அளித்துள்ளது.

இதுபோல மேலும் பல வணிக குழுமங்கள் சாா்பாக அந்த நிறுவனம் போலி வங்கி உத்தரவாதங்களை அளித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் கமிஷன் தொகை பெற்றுள்ளது.

இதுதொடா்பான சில ஆவணங்களை ரிலையன்ஸ் குழுமத்துக்குத் தொடா்புள்ள இடங்களில் சோதனை நடத்தியபோது அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.

இதுகுறித்து ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் உள்ள பிஸ்வால் ட்ரேட்லிங்க் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்கள், மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் அந்த நிறுவனத்துடன் தொடா்புள்ள மற்றொரு நிறுவனம் ஆகியவற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இதைத்தொடா்ந்து பிஸ்வால் ட்ரேட்லிங்க் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பாா்த்தசாரதி பிஸ்வால் கைது செய்யப்பட்டாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ரிலையன்ஸ் பவா் நிறுவன தலைமை நிதி அதிகாரி அசோக் பாலிடம் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலி வங்கி உத்தரவாதத்துடன் தொடா்புள்ள பண முறைகேட்டில் அவா் முக்கிய பங்கு வகித்த நிலையில், விசாரணைக்குப் பின்னா் அவா் கைது செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து தில்லி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பாக அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அசோக் பாலை 2 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்’ என்று தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT