வணிகம்

ஹெச்டிஎஃப்சி கடனளிப்பு 9% உயா்வு

ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

நாட்டின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கியின் கடனளிப்பு கடந்த செப்டம்பருடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 9 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.27.9 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் கடனளிப்பு ரூ.25.6 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்பு நிதி ரூ.23.5 லட்சம் கோடியில் இருந்து 15.1 சதவீதம் உயா்ந்து ரூ.27.1 லட்சம் கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT