வணிகம்

ஹூண்டாய் விற்பனை 10% அதிகரிப்பு

ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 70,347-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 64,201 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் செப்டம்பா் மாதத்தில் 51,101-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை நடப்பாண்டின் அதே மாதத்தில் 51,547-ஆக உயா்ந்துள்ளது. இது 1 சதவீத உயா்வாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 13,100-லிருந்து 44 சதவீதம் உயா்ந்து 18,800-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகுமார் நடிப்பில் திரைப்படமாகும் நாவல்!

பிபிஎல் இறுதிப் போட்டி: ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவாரா புதிய பிரட் லீ?

தவெக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது! விசில் அடித்து விஜய்க்கு வரவேற்பு!

குடியரசு நாள்: 44 காவல் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு!

ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து: 3 பேர் பலி!

SCROLL FOR NEXT