வணிகம்

இந்தியாவில் இருந்து 8 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி

கடந்த 202425ஆம்ஆம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: கடந்த 202425ஆம்ஆம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

இது குறித்து அனைத்து இந்திய சர்க்கரை விற்பனையாளர்கள் சங்கம் (ஏஐஎஸ்டிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 அக்டோபரில் தொடங்கி 2025 செப்டம்பரில் நிறைவடைந்த கடந்த சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் நாட்டில் இருந்து 7.75 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது.

202425ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் 2025 ஜனவரி 20 முதல் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் மொத்தம் 10 லட்சம் டன் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்டது.

202425ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை ஆலைகள் 7.75 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்தன. இதில், வெள்ளை சர்க்கரை 6.13 லட்சம் டன், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை 1.04 லட்சம் டன், பச்சை சர்க்கரை 33,338 டன் ஆகும். சுமார் 21,000 டன் பச்சை சர்க்கரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள பதப்படுத்தும் ஆலைகளுக்கு வழங்கப்பட்டது. இதுவும் ஒரு மறைமுக ஏற்றுமதியாகக் கருதப்படுகிறது.

மதிப்பீட்டு சந்தைப்படுத்துதல் ஆண்டின் ஒட்டுமொத்த சர்க்கரை ஏற்றுமதியில், அதிகபட்சமாக ஜிபூட்டிக்கு 1.46 லட்சம் டன் அனுப்பப்பட்டது. அடுத்தபடியாக சோமாலியாவுக்கு 1.35 லட்சம் டன், இலங்கைக்கு 1.34 லட்சம் டன், ஆப்கானிஸ்தானுக்கு 75,533 டன் சர்க்கரை அனுப்பப்பட்டது.

202526ஆம் சர்க்கரை சந்தைப்படுத்துதல் ஆண்டில் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவும், வரும் நவம்பர் மாதத்துக்குள் ஏற்றுமதி ஒதுக்கீட்டை அறிவிக்கவும் மத்திய அரசை சங்கம் கோரியுள்ளது.

202425ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் பின்பற்றப்பட்ட ஏற்றுமதி ஒதுக்கீடு மற்றும் ஆலைகளுக்கு இடையேயான பரிமாற்ற கொள்கையை தொடரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT