ரூபாய் மதிப்பு உயர்வு. 
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவு!

ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் அந்நிய நிதி வரத்து காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் அந்நிய நிதி வரத்து காரணமாக இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து காசுகள் உயர்ந்து ரூ.88.67 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் பதட்டங்கள் உலகளாவிய சந்தைகளில் வெறுப்புக்கு வழிவகுத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.75 ஆக தொடங்கி ரூ.88.57 முதல் ரூ.88.79 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், பிறகு அதன் முந்தைய முடிவை விட 5 காசுகள் உயர்ந்து ரூ.88.67ஆக நிலைபெற்றது.

கடந்த வாரம் (அக்டோபர் 10) வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: சீனா மீது கூடுதலாக 100% வரி எதிரொலி: பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!

The rupee appreciated five paise to close at 88.67 (provisional) against the US dollar on Monday, supported by suspected RBI intervention and fresh foreign fund inflows.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசல் பலி! உச்சநீதிமன்ற உத்தரவு என்ன? முழு விவரம்! | TVK | DMK

தங்கப் பதுமை... மனுஷி சில்லர்!

நிலக் கன்னி... நோரா பதேஹி!

திருவள்ளூா்: முதுகலைப்பட்டதாரி ஆசிரியா் தகுதி தோ்வை 4,149 போ் எழுதினா்

தென்னாப்பிரிக்காவுக்கு 3-வது வெற்றி; புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT