வணிகம்

காலாண்டில் சரிந்த வீடுகள் விற்பனை

இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனை சந்தைகளில் 2025-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் சரிந்து 95,547-ஆக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் எட்டு முக்கிய வீடு-மனை சந்தைகளில் 2025-ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் சரிந்து 95,547-ஆக உள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மும்பை, புணே, டெல்லி-என்சிஆர் ஆகியவற்றில் தேவை குறைந்ததால், 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விற்பனை 1 சதவீதம் சரிந்து 95,547-ஆக உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 96,544-ஆக இருந்தது. எனினும், மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகளின் விற்பனை மதிப்பு 14 சதவீதம் உயர்ந்து ரூ.1.52 லட்சம் கோடியாக உள்ளது.

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், மும்பை பெருநகரப் பகுதியில் (எம்எம்ஆர்) வீடுகள் விற்பனை 22 சதவீதம் சரிந்து 23,334-ஆக உள்ளது. 2024-இல் இந்த எண்ணிக்கை 30,010-ஆக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை புணேயில் 18,004-லிருந்து 28 சதவீதம் சரிந்து 12,990-ஆக உள்ளது, . தில்லி-என்சிஆரில் அது 10,098-லிருந்து 21 சதவீதம் சரிந்து 7,961 ஆக உள்ளது.

செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை அகமதாபாத்தில் 9,352-லிருந்து 5 சதவீதம் சரிந்து 8,889-ஆக உள்ளது. ஆனால், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தாவில் விற்பனை உயர்ந்தது.

2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெங்களூரில் 11,160-ஆக இருந்த வீடுகள் விற்பனை நடப்பாண்டின் அதே காலாண்டில் 18 சதவீதம் உயர்ந்து 13,124 ஆக உள்ளது.

அந்த எண்ணிக்கை சென்னையில் 3,560-லிருந்து இரட்டிப்பாகி 7,862-ஆகவும், ஹைதராபாதில் 11,564-லிருந்து 53 சதவீதம் உயர்ந்து 17,658-ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 2,796-லிருந்து 33 சதவீதம் உயர்ந்து 3,729 ஆக உள்ளது.

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் எட்டு முக்கிய நகரங்களிலும் புதிய வீடுகளின் விநியோகம் 5 சதவீதம் சரிந்து 87,179-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி! டிரம்ப்

இந்தோனேசியா எண்ணெய் கப்பலில் தீ: 10 பேர் பலி, 18 பேர் காயம்!

நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

SCROLL FOR NEXT