டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவு!
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவடைந்தது.
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.88.06 ஆக நிறைவடைந்தது. ரிசர்வ் வங்கியின் தலையீடு மற்றும் உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் இல்லாத அளவில் மிகப்பெரிய லாபத்தைப் பதிவு செய்தது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் மீதான நம்பிக்கையின் காரணமாக உள்நாட்டு சந்தைகள் கிட்டத்தட்ட 0.70% வரை உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பலவீனமான டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஒரே இரவில் ஏற்பட்ட சரிவும் ரூபாயை வெகுவாக ஆதரித்தது.
Advertisement
Advertisement
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 88.74 ஆக வர்த்தகமாகி ரூ.88 என்ற குறியீட்டிற்குக் கீழே சரிந்து, டாலருர் ஒன்றுக்கு ரூ.87.93 என்ற உச்சத்தைத் தொட்டது. இறுதியாக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.88.06 ஆக நிலைபெற்றது.
நேற்று (செவ்வாயக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் குறைந்து, இதுவரை இல்லாத அளவான ரூ.88.81 ஆக இருந்தது.
இதையும் படிக்க: ஆசிய பங்குகள் உயர்வு எதிரொலி: எழுச்சியில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.