முகப்பு
வணிகம்

2-ம் நாளாக பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 16 அக்டோபர், 2025 at 6:18 AM
கோப்புப்படம்
பகிர்:

பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 82,794.79 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 446.90 புள்ளிகள் அதிகரித்து 83,052.33 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதிகபட்சமாக 83,127.64 புள்ளிகள் வரை எட்டியது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129 புள்ளிகள் உயர்ந்து 25,452.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

2 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது, உலக நாடுகளிடையேயான போர் உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஆக்சிஸ் வங்கி, அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் ஆகிய அதிக லாபத்தைச் சந்தித்து வருகின்றன.

அதேநேரத்தில் ஹெச்டிஎப்சி, ஸ்ரீராம் பைனான்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் பங்குகள் விலை குறைந்து வருகின்றன.

summary

Stock Market Updates: Nifty above 25,450; sensex rise 450 pts

முழு கட்டுரையைப் படிக்க →