தேயிலை 
வணிகம்

இறங்குமுகம் கண்ட இந்திய தேயிலை உற்பத்தி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி முந்தைய 2024 ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் 7.8 சதவீதம் சரிந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கொல்கத்தா: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி முந்தைய 2024 ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் 7.8 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 17.01 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. முந்தைய 2024 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் குறைவு. அப்போது நாட்டின் தேயிலை உற்பத்தி 18.45 கோடி கிலோவாக இருந்தது. பருவநிலை பாதிப்பு மற்றும் பூச்சி தாக்குதல்கள் உற்பத்தி சரிவுக்கு காரணமாக அமைந்தன.

2025 ஆகஸ்ட் மாதத்தில் வட இந்தியாவில், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமை உள்ளடக்கிய தோட்டங்களில் தேயிலை உற்பத்தி 16.62 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது. முந்தைய 2024 ஆகஸ்ட் மாதத்தில் இது 16.62 கோடி கிலோவாக இருந்தது.

2024 ஆகஸ்ட் மாதத்தில் 1.83 கோடி கிலோவாக இருந்த தென் இந்திய தேயிலை உற்பத்தி, நிகழாண்டின் அதே மாதத்தில் 1.61 கோடி கிலோவாகக் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் மேற்கு வங்கத்தில் தேயிலை உற்பத்தி 4.59 கோடி கிலோவாக சரிந்துள்ளது. அஸ்ஸாமில் உற்பத்தி 0.9 சதவீதம் குறைந்து 10.35 கோடி கிலோவாக உள்ளது.

அந்த மாதத்தில் வட இந்தியாவில் சிடிசி வகை தேயிலை உற்பத்தி 15.08 கோடி கிலோவிலிருந்து 13.56 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தென் இந்தியாவில் சிடிசி தேயிலை உற்பத்தி 1.54 கோடி கிலோவிலிருந்து 1.31 கோடி கிலோவாக சரிந்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் நாடு முழுவதும் ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலை உற்பத்தி 1.58 கோடி கிலோவிலிருந்து 1.92 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?

சென்னைக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி!

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

SCROLL FOR NEXT