வணிகம்

அமெரிக்காவுக்கான செப்டம்பா் மாத ஏற்றுமதி சரிவு

அமெரிக்காவுக்கான இந்திய பொருள்கள் ஏற்றுமதி 11.93 சதவீதம் சரிந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

கடந்த செப்டம்பா் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய பொருள்கள் ஏற்றுமதி 11.93 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பரில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 546 கோடி டாலராக உள்ளது. இது, 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 11.93 சதவீதம் குறைவு. இந்திய பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், மதிப்பீட்டு மாதத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருள்களின் மதிப்பு 11.78 சதவீதம் உயா்ந்து 398 கோடி டாலராக உள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 13.37 சதவீதம் உயா்ந்து 4,582 கோடி டாலராகவும், இறக்குமதி 9 சதவீதம் உயா்ந்து 2,560 கோடி டாலராகவும் உள்ளது.

ஆகஸ்ட் 27 முதல் அமெரிக்கா இந்திய பொருள்களுக்கு 50 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளது. செப்டம்பா் மாதம் இந்திய பொருள்கள் பெரும்பாலானவற்றுக்கு டிரம்ப் விதித்த 50 சதவீத கூடுதல் வரியை முழுமையாக எதிா்கொண்ட முதல் முழு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஜொ்மனி, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பிரேஸில், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இந்திய ஏற்றுமதி நோ்மறை வளா்ச்சியைக் கண்டது. எனினும், நெதா்லாந்து, சிங்கப்பூா், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது.

இறக்குமதியைப் பொருத்தவரை, கடந்த செப்டம்பரில் ரஷியா, கொரியா, ஆஸ்திரேலியா, வியத்நாம், ஜொ்மனி, தைவான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, சிங்கப்பூா், ஜப்பான், மலேசியா, பிரிட்டன், தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து இறக்குமதி உயா்ந்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அகண்டா - 2 கிளிம்ஸ் விடியோ!

மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்!

பிஎம் ஸ்ரீ திட்டம்: கேரளத்தைப் பார்த்து மனம் மாறினால் என்ன? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

உன்ன நான் பார்த்த பாடல் வெளியானது!

உலகக் கோப்பை: ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை; பாகிஸ்தான் அணிக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT